ஸ்ரீலீலாவின் பாலிவுட் படம்...அப்டேட் கொடுத்த இயக்குனர்

இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஸ்ரீலீலா கால் பதிக்கிறார்.;

Update:2025-07-06 13:45 IST

சென்னை,

இயக்குனர் அனுராக் பாசு வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கும் கார்த்திக் ஆர்யன் - ஸ்ரீலீலாவுடனான தனது படத்தை பற்றி மனம் திறந்து பேசினார்.

சமீபத்திய ஒரு பேட்டியில், படப்பிடிப்பு மற்றும் டைட்டில் குறித்து அவர் பேசினார். அவர் கூறுகையில்,

"படப்பிடிப்பு பாதி முடிந்துள்ளது, மீதி மிக விரைவில் தொடங்கும், இன்னும் ஒரு மாதத்திற்குள் படப்பிப்பிடிப்பு நிறைவடையும். விரைவில் டைட்டிலை அறிவிப்போம்" என்றார்.

அனுராக் பாசு இயக்கத்தில் இந்த ஆண்டின் முதல் வெளியீடாக 'மெட்ரோ இன் டினோ' சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் 'லைப் இன் எ மெட்ரோ' (2007) படத்தின் தொடர்ச்சி, இப்படத்தையும் அவரே இயக்கி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்