அனுஷ்காவின் “காட்டி” பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘காதி’ திரைப்படம் நாளை வெளியாகிறது.;
‘அருந்ததி’ பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷெட்டி, தற்போது தனது ‘காட்டி’ படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களை கவர வந்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
‘காட்டி’ படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இதில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ‘சைலோரே’ எனத்தொடங்கும் முதல் பாடல் ஜூன் 23ம் தேதி வெளியானது. அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அனுஷ்காவின் “காட்டி” பட கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.