'குட் பேட் அக்லி' பட வில்லனுக்கு சிறந்த நடிகருக்கான விருது

இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய 'ரசவாதி' படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார்.;

Update:2025-04-12 20:54 IST

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதில், லைப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார்.

கடைசியாக கடந்த 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய 'ரசவாதி' படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.  இப்படத்திற்காக அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூ ஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதனை இயக்குனர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படம் வெல்லும் முதல் விருது இதுவல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதை இப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்