“சீதா பயணம்” படத்தின் ‘அசல் சினிமா’ பாடல் வெளியீடு

அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ள “சீதா பயணம்” படம் வருகிற பிப்ரவரி 14ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2026-01-22 15:53 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் 1992-ல் வெளியான 'சேவகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' என 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து 'சொல்லிவிடவா' படத்தை இயக்கியிருந்தார்.

6 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் ‘சீதா பயணம்’ என்ற புதிய படத்தை அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ‘சீதா பயணம்’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜாவும் இப்படத்தில் நடித்துள்ளார். காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 14ந் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘சீதா பயணம்’ படத்தின் ‘அசல் சினிமா’ பாடல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்