'குபேரா' படத்துடன் மோதும் அதர்வாவின் 'டி.என்.ஏ'

இந்த இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால் அவைகளுக்கிடையே போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-06-04 17:19 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில்ல் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சரப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் தனுஷ் "தேவா" என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 'குபேரா' படத்துக்கு போட்டியாக அதர்வாவின் 'டி.என்.ஏ' திரைப்படம் வெளியாக உள்ளது. அதாவது, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'டி.என்.ஏ'. நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் அதர்வா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது. அதாவது, வரும் ஜூன் 20-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் வருகிற ஜூன் 20-ந் தேதி தேதி திரைக்கு வர உள்ளன. இதனால் குபேரா படத்துக்கும் டி.என்.ஏ படத்தும் இடையே போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்