'பேட் கேர்ள்' சர்ச்சை - குரல் கொடுத்த பிரபல இயக்குனர்

பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.;

Update:2025-02-21 06:35 IST

சென்னை,

காக்கா முட்டை விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.

அஞ்சலி , ரம்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இந்த சர்சைகளுக்கு மத்தியில், பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணி 'பேட் கேர்ள்' படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

``குக்கரில் சாதம் பொங்கும் பொழுது ஓரிரு அரிசிகள் வெளியே வரும், அதற்குள் சாதம் வேகவில்லை என முடிவு பண்ண முடியுமா?. ஒரு திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல் அது சரியா..தவறா..? என்று கருத்து கூறுவது அரை வேக்காட்டுத்தனம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்