பைசனுக்கு முன்...பைசனுக்கு பின் - அனுபவத்தை பகிர்ந்த அனுபமா
மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.;
சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தற்போது இவர் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்துள்ளார், இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனில் பேசிய அனுபமா இப்படத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் அவர் கூறுகையில்,
"எனது முதல் படத்திலிருந்து பைசன் வரை, நான் ஒரு நடிகையின் பதிப்பு(version).இப்போது பைசனுக்குப் பிறகு நான் நடிகையின் மற்றொரு பதிப்புபோல உணர்கிறேன்.
பைசனுக்குப் பிறகு, என்னால் எந்த படத்திலும் நடிக்க முடியும். பிரேமத்திற்குப் பிறகு, பைசன் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது’ என்றார்"