ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஊர்வசியின் புகைப்படம்
நடிகை பாமா, பழம்பெரும் நடிகை ஊர்வசியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.;
சென்னை,
பிரபல மலையாள நடிகை பாமா, பழம்பெரும் நடிகை ஊர்வசியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை பாமா, சமீப காலமாக சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மகிழ்ச்சியான நினைவுகளையும், புகைப்படங்களையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நடிகை பாமா, பழம்பெரும் நடிகை ஊர்வசியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் பாமா, ஊர்வசியின் மடியில் தலை சாய்த்து படுத்திருப்பதை காண முடிகிறது.
"ஆல் டைம் பேவரைட் ஊர்வசி" என்ற வாசகத்துடன் அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். பாமாவும் ஊர்வசியும் முன்னதாக ''சகுடும்பம் சியாமளா'' படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.