"பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பானது" - சீரியல் நடிகை பவித்ரா

நடிகை பவித்ரா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.;

Update:2025-11-26 08:08 IST

சென்னை,

சீரியல் உலகில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பவித்ரா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் பிக்பாஸ் போட்டியாளராக அறியப்படும் பவித்ரா, நிகழ்ச்சியின் மீது சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "சீரியல் நடிகர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம், நாட்டில் எவ்வளவோ சீரழிவுகள் நடக்கும் நிலையில், பிக்பாஸ் மீது மட்டும் குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல" என்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்களுக்கு மத்தியில் பவித்ராவின் இந்த கருத்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்