இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் (23.01.2026)
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 23ந் தேதி தியேட்டர்களில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
* திரௌபதி 2
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்சனா இந்துசூடன் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் 'திரௌபதி 2'. இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
* ஹாட் ஸ்பாட் டூ மச்
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கேஜேபி டாக்கீஸ், விஷ்ணு விஷால் ஸ்டியோஸ் மற்றும் ஏ2ஈ சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
* வங்காள விரிகுடா
குகன் சக்வர்த்தியார் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'வங்காள விரிகுடா'. இப்படம், நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
* மாயபிம்பம்
செல்ப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’. இப்படத்தில் புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
* ஜாக்கி
மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு 'ஜாக்கி' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் வான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
* பேபி கேர்ள்
மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அருண் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேபி கேர்ள். நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ள இதில், லிஜோமோல் ஜோஸ், அதிதி ரவி, சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.