ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ பட டீசர் எப்போது?.. வெளியான தகவல்
‘துரந்தர் த ரிவெஞ்ச்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.;
சென்னை,
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. ‘தெய்வ திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், இதில் ரன்வீர் சிங்கின் ஜோடியாக நடித்துள்ளார். மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாகிஸ்தானில் நடைபெற்ற ‘ஆபரேஷன் லியாரி’ மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்பு ‘ரா’ மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த ஸ்பை திரில்லர், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், உலகம் முழுவதும் ரூ.1300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘துரந்தர் த ரிவெஞ்ச்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. பான் இந்திய வெளியீடாக மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் 1 நிமிடம் 48 விநாடிகள் கொண்ட டீசர், வருகிற 23ஆம் தேதி முதலில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பின்னர் யூடியூபில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.