என் மனதில் எல்லையில்லா ஆனந்தம்- நடிகை ருக்மிணி வசந்த்
ருக்மிணி வசந்த் தற்போது ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ‘காந்தாரா சாப்டர்-1' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.;
சென்னை,
பெங்களூருவைச் சேர்ந்த ருக்மிணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஏஸ்' படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மதராஸி' படத்திலும் நடித்துள்ளார். எதார்த்தமான நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் ‘கிக்கு' ஏற்றும் ருக்மிணி வசந்துக்கு, ரசிகர் பட்டாளமும் உண்டு.
ருக்மிணி வசந்த் தற்போது ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கும் ‘காந்தாரா சாப்டர்-1' படத்தில் நடித்து முடித்துள்ளார். யாஷ் உடன் ‘டாக்சிக்' படத்தில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து ருக்மிணி வசந்த் கூறும்போது, ‘‘என்னை நடிகையாக அங்கீகரித்த ரசிகர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ‘காந்தாரா' படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். என் நடிப்பைப் பார்த்து ரிஷப் ஷெட்டியே ‘அற்புதம்' என பாராட்டியதை மறக்க முடியாது. ரசிகர்கள் காட்டும் அன்பினால் என் மனம் எல்லையில்லா ஆனந்தத்தில் இருக்கிறது. இது அப்படியே தொடர இறைவனை வேண்டுகிறேன்'' என்றார்.