ஆர்.ஆர்.ஆர்-க்குப் பிறகு மீண்டும் இணையும் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண்?
இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ஜூனியர் என்.டி.ஆருடன் இணைய உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.;
சென்னை,
தெலுங்கு நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்படத்தை பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கினார்.
இதனையடுத்து, மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ஜூனியர் என்.டி.ஆருடன் இணைய உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவர் தற்போது ராம் சரணிடம் ஒரு ஸ்கிரிப்டை கூறியதாகவும், அது அவருக்கு பிடித்திருந்ததாகவும் தெரிகிறது. இது ஜூனியர் என்.டி.ஆரிடம் கூறிய அதே ஸ்கிரிப்டா அல்லது வேறா என்பது தெரியவில்லை.
சுவாரஸ்யமாக, ரஜினி மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் மல்டிஸ்டாரர் படத்தையும் நெல்சன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
நெல்சன் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணியாற்றி வருகிறார்.