குணச்சித்திர நடிகர் முருகன் என்ற மொக்கை சாமி காலமானார்

நடிகர் முருகன் என்ற மொக்கை சாமி (வயது 78) மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.;

Update:2025-06-04 20:30 IST

மதுரை,

நடிகர் முருகன் தமிழ் திரைப்படங்களில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை வேடங்களில் நடித்து, ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்தவர். இவர் சசிகுமார் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான 'சுப்பிரமணியபுரம்' படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

முருகன் என்ற மொக்கை சாமி திரைக்கு வரும் முன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலைக்கடை வைத்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த நடிகர் இலைக்கடை முருகன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. இந்த செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்