காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த ’சுயம்பு’ படக்குழு...நாளை வெளியாகும் ரிலீஸ் தேதி
இப்படத்தில் சம்யுக்தா மேனன் மற்றும் நபா நடேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.;
சென்னை,
நிகிலின் வரலாற்று அதிரடி படமான 'சுயம்பு 'நீண்ட காலமாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது. முன்னதாக, டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், இறுதியாக ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 11 மணிக்கு சிறப்பு வீடியோவுடன் வெளியாக உள்ளது.
சுயம்பு படத்தை பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கியுள்ளார், பிக்சல் ஸ்டுடயோஸின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரித்துள்ளனர். சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். கேஜிஎப் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.