''கூலி' ஜொலிக்கும்...அது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம்'' - சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்துக்கு, சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.;
சென்னை,
திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழும் ரஜினிகாந்த், வருகிற 15ம் தேதியுடன் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த நிலையில், ரஜினிக்கு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“உங்களைப் பார்த்து, உங்களைப் போல மிமிக்ரி செய்து, உங்களது பாதையில் பயணித்து இப்போது நீங்கள் இருக்கும் துறையிலேயே இருப்பது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள். உங்கள் கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக கூலி' திரைப்படம் ஜொலிக்கும்" இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.