ஸ்ரீலீலா, கெட்டிகா ஷர்மாவுடன் நடனமாடிய டேவிட் வார்னர்- வைரலாகும் வீடியோ
டேவிட் வார்னர் ’ராபின்ஹுட்’ படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்து டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.;
ஐதராபாத்,
நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் படம் 'ராபின்ஹுட்'. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்து டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பிரமாண்டமான பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. டேவிட் வார்னர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது வார்னர், மேடையின் கீழ் புஷ்பா ஸ்டெப் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
பின்னர் மேடையில், ஸ்ரீலீலா, கெட்டிகா ஷர்மா மற்றும் நிதினுடன் நடனமாடினார். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளிட்டநிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.