'தேவா படத்தில் நடிக்க அதுதான் காரணம்' - ஷாஹித் கபூர்

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்;

Update:2025-01-24 07:04 IST

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர். இவர் தற்போது தேவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார் .ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி இருக்கும் இப்படம் வரும் 31-ம் தேதி வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க முக்கிய காரணம் அதன் கிளைமாக்ஸ் காட்சிதான் என்று நடிகர் ஷாஹித் கபூர் கூறி இருக்கிறார்.

அதன்படி, தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, பல கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் எதை படத்தில் சேர்ப்பது என்று இன்னும் படக்குழு யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்