’கர’ - தனுஷின் கதாபாத்திரம் குறித்து பேசிய இயக்குனர்

இந்த படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.;

Update:2026-01-21 06:47 IST

சென்னை,

நடிகர் தனுஷ் அடுத்து நடித்து வரும் படம் ‘கர’. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ’போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் இந்த படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.

சமீபத்திய ஒரு பேட்டியில், இயக்குநர் விக்னேஷ் ராஜா, இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்து விரிவாக பேசினார். அவர் கூறுகையில்,

“கதையை எழுதும் போதே இந்தக் கதாபாத்திரத்திற்கு தனுஷ் மிகவும் பொருத்தமானவர் என்று தோன்றியது. கதாபாத்திரத்தின் மனதிற்குள் நிலவும் பதற்றத்தை நுணுக்கமான ரியாகசன்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில், இந்தக் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். தனுஷ் போன்ற திறமையான நடிகரை வைத்து இதைச் சாத்தியப்படுத்தியது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது” என்றார்.

இந்தப் படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்