ஸ்ரேயா கோஷலை தொடர்ந்து ஹேக் செய்யப்பட்ட டி. இமானின் எக்ஸ் தள பக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டது;

Update:2025-03-07 12:32 IST

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி. இமான். இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டி. இமான் தெரிவித்துள்ளார். அதில்

'அனைவருக்கும் வணக்கம், எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் தற்போது 'எக்ஸ்' -ஐ அணுகி, எனது கணக்கை விரைவில் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

புதிதாக அந்த பக்கத்தில் இருந்து வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம். உங்கள் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி. எனது எக்ஸ் பக்கத்தை மீண்டும் பெற்றவுடன் உங்களிடம் கூறுகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள பக்கமும் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்