‘சக்தித் திருமகன்' படத்தின் கதை திருட்டு சர்ச்சைக்கு டைரக்டர் விளக்கம்

சுபாஷ் சுந்தர் என்பவர் ‘சக்தித் திருமகன்' படத்தின் கதை தன்னுடையது என கருத்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது.;

Update:2025-10-31 02:58 IST

சென்னை,

அருண் பிரபு இயக்கி விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்' படம், கடந்த செப்டம்பர் 19-ந்தேதி ரிலீஸ் ஆனது. பின்னர் இந்த படம் இம்மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது. சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தநிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என சுபாஷ் சுந்தர் என்பவர் கருத்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. இது மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை என்றும், பிரபல நிறுவனத்துக்கு அந்த கதையை அனுப்பியதாகவும், அங்கிருந்து தான் இந்தக் கதை திருடப்பட்டு இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து டைரக்டர் அருண் பிரபு வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘பல வருட உழைப்புக்கு பின், இதுபோன்ற அவதூறுகள் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. முதலில் செய்தியைக் கேட்டதும், இது வெறும் ஆன்லைன் டிரோல் விட்டுவிட வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனாலும் பலரும் என்னிடம் விளக்கம் கேட்டதைத் தொடர்ந்து தெளிவுபடுத்தவே இந்த பதிவு. இது மிகவும் தவறான அவதூறு. நான் உழைத்து எழுதிய கதையே இது'', என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்