’என் படங்களை அனுதாபத்துடன் பார்க்காதீர்கள்’ - பிரபல நடிகர்

அறிமுக இயக்குனர் ஜெயின்ஸ் நானி இயக்கும் படத்தில் யுக்தி தரேஜா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.;

Update:2025-10-15 09:15 IST

சென்னை,

கிரண் அப்பாவரத்தின் கே-ராம்ப் படம் வருகிற 18 ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ஜெயின்ஸ் நானி இயக்கும் இந்தப் படத்தில் யுக்தி தரேஜா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், கிரண் ஒரு வலுவான கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரு பேட்டியில் பேசிய கிரண், "எனது படங்களை யாரும் அனுதாபத்துடன் பார்ப்பதை நான் விரும்பவில்லை. நான் இங்கு பரிதாபப்பட வரவில்லை. எனது புரமோஷனும் டிரெய்லரும் உங்களுக்கு உண்மையிலேயே பிடித்திருந்தால், திரையரங்குகளுக்கு வாருங்கள்" என்றார்.

இந்த படத்தில் சாய் குமார், நரேஷ் விஜயகிருஷ்ணா, கம்னா ஜெத்மலானி, முரளிதர் கவுட், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஹாஸ்யா மூவிஸ் மற்றும் ருத்ரான்ஷ் செல்லுலாய்டு ஆகியவற்றின் கீழ் ராஜேஷ் தண்டா மற்றும் சிவா பொம்மக்கு இணைந்து கே-ராம்பை தயாரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்