''அவருடன் 1 படத்தில் நடிப்பது 100 படங்களில் நடித்ததற்கு சமம்'' - நிதி அகர்வால்
பவன் கல்யாணுடன் நடித்த அனுபவத்தை பற்றி நிதி அகர்வால் பகிர்ந்திருக்கிறார்.;
சென்னை,
பவன் கல்யாணின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி படமான ''ஹரி ஹர வீர மல்லு'' வருகிற 24-ம் தேதி பான்-இந்திய அளவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். இந்நிலையில், பவன் கல்யாணுடன் நடித்த அனுபவத்தை பற்றி அவர் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறுகையில்,
''பவன் கல்யாணுடன் பணியாற்றுவதை நான் பாக்கியமாக உணர்கிறேன். அவருடன் 1 படத்தில் நடிப்பது 100 படங்களில் நடித்ததற்கு சமம். பவன் கல்யாணுடன் எனக்கு அதிக காம்பினேஷன் காட்சிகள் உள்ளன," என்றார்.
இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாபி தியோல், நோராபதேஹி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசை அமைத்துள்ளார்.