'இனிமேல் அப்படி கேட்காதீர்கள்'- கொந்தளித்த காஜல் அகர்வால்
திருமணத்துக்கு பிறகு காஜல் அகர்வால் அளவான படங்களிலேயே நடித்து வருகிறார்.;
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் கண்ணப்பா படம் வெளியானது. அதனை தொடர்ந்து 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ‘ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார்.
ஒருகாலத்தில் சினிமாவின் முன்னணி நடிகையாக கோலோச்சிய காஜல் அகர்வால், விட்ட இடத்தை பிடிக்க துடியாய் துடிக்கிறாராம். உடற்பயிற்சி மூலம் உடலையும் கட்டுக்கோப்பாக்கி வருகிறார்.
மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர காத்திருக்கும் காஜல் அகர்வாலிடம், ‘40 வயதை கடந்த நிலையில் மீண்டும் சினிமாவில் சாதிக்க வந்துள்ளதற்கு வாழ்த்துகள்' என்று சொல்ல, நடிகை கொந்தளித்துவிட்டாராம். ‘40 வயதானால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. திறமைக்கு வயது தடையாக இருக்காது. இனி அப்படி கேட்காதீர்கள்' என்று சொல்லிவிட்டாராம்.