டிராகன் படத்தின் "ஏன்டி விட்டு போன" வீடியோ பாடல் வெளியீடு

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.;

Update:2025-03-27 20:54 IST

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். கடந்த 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர். இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் வாரத்தில் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இதுவரை சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் டிராகன் படக்குழு நடிகர் விஜய்யை சந்தித்தனர். அஷ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்சனா, லியோன் ஜேம்ஸ், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் விஜயோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

 

இந்நிலையில் 'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கொ சேஷா வரிகளில் சிலம்பரசன் பாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்