"அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" - திரிப்தி டிம்ரி

"அனிமல்" படத்தில் ரசிகர்களை கவர்ந்த திரிப்தி திம்ரி, தற்போது தெலுங்கு சினிமாவில் தனது முத்திரையை பதிக்கத் தயாராகி உள்ளார்.;

Update:2025-07-22 17:42 IST

சென்னை,

சந்தீப் ரெட்டி வங்காவின் பாலிவுட் பிளாக்பஸ்டர் "அனிமல்" படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த திரிப்தி திம்ரி, தற்போது தெலுங்கு சினிமாவில் தனது முத்திரையை பதிக்கத் தயாராகி உள்ளார்.

சமீபத்தில் தனது முதல் தெலுங்கு படத்தில் ஒப்பந்தமானார். சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்த படமான ''ஸ்பிரிட்''-ல் கதாநாயகியாக திரிப்தி நடிக்கிறார், பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்திய பேட்டியில் திரிப்தி "ஸ்பிரிட்" படப்பிடிப்பில் இணைவது குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். படப்பிடிப்பைத் தொடங்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.

"ஸ்பிரிட்" படப்பிடிப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்க உள்ளது. இதில் பிரபாஸ் ஒரு போலீஸ்காரராக நடிக்கிறார். பிரபாஸும் சந்தீப் ரெட்டி வங்காவும் இணையும் முதல் படமாக "ஸ்பிரிட்" உள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்