நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
துல்கர் சல்மானிற்கு சொந்தமான வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்;
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் துல்கர் சல்மான். இவரது தயாரிப்பில் கடந்த மாதம் "லோகா சாப்டர் 1" என்ற படம் வெளியாகி, வசூலை அள்ளியது. மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம் கொச்சியில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் கிரீன்வே சாலையில் உள்ள துல்கர் சல்மானிற்கு சொந்தமான வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது தயாரிப்பு நிறுவன அலுகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செயப்பட்ட விவகாரத்தி சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. துல்கர் சல்மான் வீட்டில் காலையிலையே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருப்பது திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாக நடிகர்கள் பிருத்விராஜ், மம்முட்டி மற்றும் அமித் சக்கலக்கல் உள்ளிட்டோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையினர் எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.