அர்ஜுன் தாசுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.;

Update:2025-04-13 10:46 IST

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதில், லைப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், ரசவாதி, அநீதி ஆகிய படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். கடைசியாக கடந்த 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இதனை அடுத்து நடிகர் அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் 23 வயதில் நாயகியாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் கலக்கி வரும், பிரபல நடிகை மமிதா பைஜு தான் கதாநாயகியாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்