''லக்கி பாஸ்கர்'' நடிகையின் அடுத்த படம் - பர்ஸ்ட் லுக் வெளியீடு

இப்படத்திற்கு ''லவ் ஜதாரா'' எனப்பெயரிடப்பட்டுள்ளது.;

Update:2025-06-28 06:45 IST

சென்னை,

''சம்மதமே'' பட புகழ் இயக்குனர் கோபிநாத் ரெட்டி, வளர்ந்து வரும் நட்சத்திரங்களான அங்கித் கோய்யா மற்றும் ''லக்கி பாஸ்கர்'' பட நடிகை மானசா சவுத்ரி ஆகியோரை வைத்து தனது அடுத்த படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர்  நேற்று வெளியானது. யுஜி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கன்கனாலா பிரவீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ''லவ் ஜதாரா'' எனப்பெயரிடப்பட்டுள்ளது.

சைத்தன் பரத்வாஜ் படத்திற்கு இசையமைக்கிறார். சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்