தெலுங்கில் அறிமுகமாகும் ''பெருசு'' பட நடிகை - பர்ஸ்ட் லுக் வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 3 படங்களுக்கு கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நிஹாரிகா.;

Update:2025-06-07 02:12 IST

சென்னை,

சமூக வலைதள பரபலம் நிஹாரிகா. இவர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பெருசு' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 3 படங்களுக்கு கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில், இவர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். அதன்படி, இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படமான ''மித்ரா மண்டலி'' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. கல்யாண் மந்தினா, பானு பிரதாபா மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் சப்தா அஸ்வா மீடியா ஒர்க்ஸ் மற்றும் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் விஜயேந்தர் எஸ் இயக்கும் இந்த படத்திற்கு ஆர்ஆர் துருவன் இசையமைக்கிறார். சித்தார்த் எஸ்ஜே ஒளிப்பதிவு செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்