நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்

அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது.;

Update:2025-08-06 23:48 IST

நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'பாரடைஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்