'ஜெய் பீம்' நடிகையின் புதிய படம் - முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

லிஜோமோல் ஜோஸ் தற்போது நடித்துள்ள படம் 'காதல் என்பது பொதுவுடைமை'.;

Update:2025-02-05 21:15 IST

சென்னை,

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருபவர் லிஜோமோல் ஜோஸ். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான : மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து, ஹனி பீ 2.5 , சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் தற்போது நடித்துள்ள படம் 'காதல் என்பது பொதுவுடைமை'. ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'தீயாய்' என்ற பாடல் வருகிற 7-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்