ஒரு வட்டத்துக்குள் அடைபடாமல் இருப்பதே சுதந்திரம் - சமந்தா

தான் செய்யும் வேலைகள் எனக்கு நிம்மதி தரும்போது, மற்றவர்களின் கருத்துக்கு எதற்கு கவலைப்பட வேண்டும் என்று நடிகை சமந்தா பேசியிருக்கிறார்.;

Update:2025-06-16 08:35 IST

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 'பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்' என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த சமயத்தில் 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து 'தெறி, மெர்சல்' என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமெ போதுமான ரீச் கொடுக்கவில்லை. அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மீண்டும் முன்புபோல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

'ராக்ட் பிரமானந்த் - தி பிளடி கிங்டம்' என்ற வெப் தொடரிலும், 'பங்காரம்' என்ற புதிய தெலுங்கு படத்திலும் அவர் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ் நிடிமொருவுடன் காதல், விரைவில் திருமணம் என்று பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தா, மனம் திறந்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். " 2 ஆண்டுகளாக என் படங்கள் வெளியாகவில்லை. வளர்ச்சி அடைவதும், முதிர்ச்சி அடைவதும்தான் சுதந்திரம். முக்கியமாக ஒரு வட்டத்துக்குள் அடைபடாமல் இருப்பதே சுதந்திரம் என்பது இப்போது எனக்கு புரிந்திருக்கிறது.

முன்பு போல வெற்றிகள் இல்லையே... என்று என்னை பற்றி சுற்றியிருப்பவர்கள் நினைக்கலாம், பேசலாம். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் செய்யும் வேலைகள் எனக்கு நிம்மதி தரும்போது, மற்றவர்களின் கருத்துக்கு எதுக்கு கவலைப்பட வேண்டும்" என்று சமந்தா பேசியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்