'பிரீடம்' படத்தின் ரிலீஸ் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

'பிரீடம்' திரைப்படத்தை முதலில் ஜூலை 10ம் தேதியன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர்.;

Update:2025-07-18 10:10 IST

சென்னை,

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி தொடர்ந்து சசிகுமார் பிரீடம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை சத்யசிவா இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார்' இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது.

இத்திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படம் அந்த தேதி வெளியாக வில்லை. இந்த நிலையில் பிரீடம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், 'பிரீடம்' திரைப்படம், முதலில் ஜூலை 10, 2025 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்