தமிழ் சினிமாவில் நல்ல கதைக்கு வரவேற்பு உண்டு - நடிகை மால்வி மல்ஹோத்ரா
மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஜென்ம நட்சத்திரம்' படம் வருகிற 18-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.;
மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஜென்ம நட்சத்திரம்'. அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள இந்த படம் வருகிற 18-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் தமன், சிவம், அருண்கார்த்தி, தலைவாசல் விஜய், மைத்ரேயன், நடிகை ரக்ஷா, மால்வி மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை மால்வி மல்ஹோத்ரா, "ஜென்ம நட்சத்திரம்' படத்தின் தொழில்நுட்பக்குழுதான் படத்துக்கு பெரிய பலம். அவர்கள் இந்தப் படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தமன் திறமையான நடிகர். நிச்சயம் அவருக்கு அடுத்தடுத்து நல்ல படங்கள் கிடைக்கும்.
தமிழ் சினிமாவில் நல்ல கதைக்கு வரவேற்பு உண்டு. 'ஜென்ம நட்சத்திரம்' எங்கள் அனைவருக்கும் ஸ்பெஷலான படம். நீங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் படத்தில் இருக்கும். கிளைமாக்ஸ் வரை அடுத்த என்ன என்பதை ரசிகர்கள் யூகித்துக் கொண்டே இருப்பார்கள். அதிர்ச்சிகரமான ஹாரர் நிகழ்வை சுற்றி கதை இருக்கும்" என்று கூறினார்.