கோபிசந்தின் அடுத்த படம் பூஜையுடன் துவக்கம்

சமீபத்தில் இவரின் 33-வது பட அறிவிப்பு வெளியானது.;

Update:2025-04-25 11:28 IST

சென்னை,

ஆரம்பத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர் கோபிசந்த், பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினாா். மிகப்பெரிய வெற்றிப்படம் என்று எதுவும் அமையாவிட்டாலும், அவரது படங்கள் அனைத்தும் சுமாரான வரவேற்பை பெறும்.

இவர் கடைசியாக ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் விஷ்வம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனக்களை பெற்றது. சமீபத்தில் இவரின் 33-வது பட அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இவரின் அடுத்த படம் பூஜையுடன் துவங்கி இருக்கிறது. குமார் வெள்ளங்கி இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரிக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்