பல லட்சத்திற்கு ஏலம் போன ஹாரி பாட்டர் புத்தகம்

ஹாரி பாட்டர் நாவலின் முதல் பதிப்பு புத்தகம் குப்பையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.;

Update:2025-02-11 08:12 IST

சென்னை,

1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர் அண்ட் தி பிளாசபர்ஸ் ஸ்டோன்' புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங்.

இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், 'ஹாரி பாட்டர் அண்ட் தி பிளாசபர்ஸ் ஸ்டோன்' நாவலின் முதல் பதிப்பு புத்தகம் சுமார் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார். 500 புத்தகங்களே அச்சிடப்பட்டதால், இது அரிதாக கருதப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்