'ராபின்ஹுட்' படத்தில் டேவிட் வார்னர் நடித்தது எப்படி? - இயக்குனர் விளக்கம்
'ராபின்ஹுட்' படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்து டேவிட் வார்னர் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.;
ஐதராபாத்,
நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் படம் 'ராபின்ஹுட்'. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்து டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் டேவிட் வார்னர் நடித்தது எப்படி என்பதை இயக்குனர் வெங்கி குடுமுலா பகிர்ந்துள்ளார்.அவர் கூறுகையில்,
'சர்வதேச நட்சத்திரம் இப்படத்தில் நடித்தால் அது படத்தின் தரத்தை உயர்த்தும் என்று நினைத்தேன். கிரிக்கெட் ரசிகனாக இருந்ததால், டேவிட் வார்னரின் பெயரை தயாரிப்பாளர்களுக்கு பரிந்துரைத்தேன். பின்னர் வார்னரை டெல்லியில் சந்தித்து, படத்தை பற்றி பேசினேன். அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்' என்றார்.