நாய்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது- நடிகை ஸ்ரீ ஸ்வேதா

என் வீட்டு நாய் அருகில் கூட செல்லவே பயமாகதான் இருக்கிறது என்று நடிகை ஸ்ரீ ஸ்வேதா கூறியுள்ளார்.;

Update:2025-09-25 07:29 IST

சென்னை,

எம்.சுந்தர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அந்த 7 நாட்கள்’. படத்தில் கே.பாக்யராஜ், அஜித்தேஜ், ஸ்ரீஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் சிறப்பு திரையிடல் சென்னையில் நடந்தது. விழாவில் படத்தின் கதாநாயகியான ஸ்ரீ ஸ்வேதா வெறிநாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 7 நாட்களில் இறந்து விடுவதாக அவரது கேரக்டர் அமைந்து உள்ளது.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு நாய்கைளை பார்த்தாலே கொஞ்சம் பயமாகதான் இயக்கிறது. என் வீட்டு நாய் அருகில் கூட செல்லவே பயமாகதான் இருக்கிறது என்றார். மேலும், இது போன்ற கதைகளில் நடிகைகள் பலர் நடிக்க தயங்குவார்கள் எப்படி நீங்க தைரியமாக நடித்தீர்கள்? என்ற கேள்வி அவரிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு திறமையை நிரூபிப்பது தானே நடிப்பு. அதற்கான இடத்திற்குதானே காத்திருக்கிறோம் என்று பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்