கூகுளின் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன் - நடிகை ருக்மணி வசந்த்

விஜய் சேதுபது-ருக்மணி வசந்த் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஏஸ்' படம் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-05-18 21:35 IST

சென்னை,

விஜய் சேதுபது-ருக்மணி வசந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஏஸ்'. இந்த படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் எழுதி, இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு, பப்லு, பிரிதிவிராஜ், அவினாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ரிலீஸையொட்டி டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகை ருக்மணி வசந்த், "கன்னட படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த போது 'ஏஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிக்க நான் கூகுளின் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன். அதனால்தான் உங்களோடு இப்படி தமிழில் பேச முடிகிறது. விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இதுவரை மிக அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளேன், ஆனால் ஏஸ் காமெடி கலந்த அழகான படம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்