‘குத்துப்பாட்டில் நடனமாடுவது எனக்கு பிடித்திருக்கிறது'- பூஜா ஹெக்டே

கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடிய ‘மோனிகா...' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.;

Update:2025-08-07 06:16 IST

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ள இப்படம் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா...' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டிருக்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றது.

இந்த பாடலுக்கு நடனமாட மட்டுமே பூஜா ஹெக்டே ரூ.2 கோடி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு படத்தில் நடிக்க ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர் ஒரு பாடலுக்கு மட்டுமே இவ்வளவு சம்பளம் பெற்றது அனைவரையுமே கவனிக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘குத்துப்பாட்டு என்றாலே ஒரு உற்சாகம் பிறக்கிறது. அதில் மயக்கும் நடனமாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. பாலிவுட் போல தென்னிந்திய சினிமாவிலும் குத்துப்பாடல்கள் பிரபலமாகி இருக்கிறது'', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்