'''பசங்க'' படத்தில் விஜய் சேதுபதியை நிராகரித்தேன்'' - பாண்டிராஜ்

விஜய் சேதுபதியுடனான சந்திப்பு குறித்த ஒரு சுவாரசியமான நிகழ்வை பாண்டிராஜ் பகிர்ந்து கொண்டார்.;

Update:2025-07-19 19:26 IST

சென்னை,

விஜய் சேதுபதி நடித்துள்ள ''தலைவன் தலைவி'' படம் வருகிற 25-ம் தேதி வடிவேலு-பகத் பாசில் நடித்துள்ள ''மாரீசன்'' படத்துடன் வெளியாகிறது.

''தலைவன் தலைவி'' படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளநிலையில், இயக்குனர் பாண்டிராஜ், விஜய் சேதுபதியுடனான தனது சந்திப்பு குறித்த ஒரு சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பேசுகையில், ''பசங்க'' படத்தில் விஜய் சேதுபதி நடிக்க விருப்பம் தெரிவித்தபோது, அந்த வாய்ப்பை நிராகரித்தேன். அவர் நிராகரிக்கப்பட்ட போதிலும் விமலை எனக்கு அறிமுகப்படுத்தி, அவர் அந்த வேடத்திற்குப் பொருந்துவாரா என்று கேட்டார். அப்படித்தான் நான் விமலை படத்திற்குத் தேர்ந்தெடுத்தேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்