''அதற்காக விஜய் சேதுபதியை பாராட்டுகிறேன்'' - நித்யா மேனன்

விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவம் தனக்கு இருப்பதால் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டதாக நித்யா மேனன் கூறினார்.;

Update:2025-07-22 19:02 IST

சென்னை,

''தலைவன் தலைவி'' படம் வருகிற 25-ம் தேதி ரிலீஸாக உள்ளநிலையில், நித்யா மேனன், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவம் தனக்கு இருப்பதால் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறுகையில், "கதாநாயகனுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் வழங்கப்படுவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

கிராமப்புற பின்னணியில் ஸ்கிரிப்ட் இருந்தும் கூட, இரண்டு கதாபாத்திரங்களுக்கும் சமமான மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புற சூழல்களில் அத்தகைய ஸ்கிரிப்ட்கள் மிக குறைவு. அதனால்தான் எனக்கு தலைவன் தலைவியை மிகவும் பிடித்தது'' என்றார்

தொடர்ந்து பேசிய நித்யா மேனன் கதாநாயகன் விஜய் சேதுபதியை பாராட்டினார். அவர் கூறுகையில்,

" வலுவான பெண் கதாபாத்திரத்துடன் நடிப்பதை நடிகர்கள் விரும்புவதில்லை. அனால், ஹீரோவை மட்டுமே மையமாகக் கொண்டு அல்லாமல் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ள படத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக விஜய் சேதுபதியை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்