பயனர்களுக்கு வேற லெவல் அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்
பயனர்களை கவர அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை இன்ஸ்டாகிராம் வழங்கி வருகிறது.;
representation image (Meta AI)
மும்பை,
சமூக வலைத்தளங்களில் பயனர்கள் இடையே அதிக ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எனப்படும் ஷார்ட் வீடியோக்கள் இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது. இதனால், எந்நேரமும் ரீல்ஸ்களில்யே இளைஞர்கள் மூழ்கி கிடப்பதை பார்க்க முடிகிறது. விதவிதமான வீடியோக்கள் போட்டு அதிக லைக்ஸ் கமெண்டுகளையும் பெற ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். பயனர்களை கவர அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை இன்ஸ்டாகிராம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது, இன்ஸ்டாகிராமில் லிங் ரீல் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். இந்த புதிய வசதி மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். ரீல்ஸ்களை முழு தொடராக பார்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ரீல்ஸ்க்கு அடுத்து எந்த ரீல்ஸ் இடம் பெற வேண்டும் என்பதை ரீல்ஸ் அப்லோடு செய்பவர்களே முடிவு செய்து கொள்ள முடியும்.