தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதா? - செய்தியாளர் கேள்விக்கு சட்டென பதில் சொன்ன சாந்தனு

சாந்தனு நடித்துள்ள ''பல்டி'' படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.;

Update:2025-09-27 08:02 IST

சென்னை,

விஜய்யின் தவெக கட்சியில் இணைய வாய்ப்புள்ளதா? என்ற செய்தியாளர் கேள்விக்கு நடிகர் சாந்தனு சட்டென சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷேன் நிகாமின் 25-வது படமான ''பல்டி''படத்தில் சாந்தனு நடித்துள்ளார். இவர்களுடன் பிரீத்தி அஸ்ரானி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நேற்று வெளியானது. இப்படத்தின் ''ஜாலக்காரி'' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை நடிகர் சாந்தனு சந்தித்தார். அப்போது ஒருவர் அவரிடம், விஜய்யின் தவெக கட்சியில் இணைய வாய்ப்புள்ளதா? என்று கேட்டார். அதற்கு சாந்தனு பதிலளிக்கையில், ''முதலில் சினிமாவில் வெற்றிபெறுகிறேன் , அதன்பிறகு மற்றதை பார்க்கலாம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்