"தலைவர் 173" படத்தை இயக்கப்போவது இவரா? வெளியான புதிய தகவல்

‘பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் "தலைவர் 173" படத்தை இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.;

Update:2025-11-27 03:45 IST

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை சுந்தர் சி இயக்கப்போவதாக இருந்தது. ஆனால் என்ன ஆனதோ... தெரியவில்லை, அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார் . சுந்தர் சி விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது ‘மூக்குத்தி அம்மன்-2' படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.

இதற்கிடையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் கே.எஸ்.ரவிகுமார், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் பெயர் அடிபடுகிறது.

இப்போது ‘பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான், ரஜினி-கமல் கூட்டணி படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சிம்பு நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ள ராம்குமார் பாலகிருஷ்ணன், அதனைத்தொடர்ந்து இப்படத்தை இயக்கலாம் என்றும் பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்