கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு?

கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனன் இருந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-08-27 11:25 IST

கோப்புப்படம் 

கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை லட்சுமி மேனனை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியபோது இரு கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கும்பல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளது. அவர்களை பின்தொடர்ந்த மற்றொரு கும்பல் அந்த காரை மறித்து, அதிலிருந்த ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனன் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை லட்சுமி மேனன் தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்