’சூர்யா 46’ படத்தின் ஒன்லைன் இதுதான் - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
சூர்யா 46 படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார்.;
சென்னை,
சூர்யாவின் கம்பேக்கிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். கடந்த சில மோசமான படங்கள் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் தோல்விகள் காரணமாக சூர்யா ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
வெங்கி அட்லூரி இயக்கும் அவரது அடுத்த படத்திற்காக அனைத்து சூர்யா ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். 'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு வெங்கி அட்லூரி இயக்கும் படம் சூர்யா 46. இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் நாக வம்சி இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
’45 வயது ஆணுக்கும் (சூர்யா) 20 வயது பெண்ணுக்கும் (மமிதா பைஜு) இடையேயான காதல், உணர்ச்சிகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது’ என்றார்.