’ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா - உற்சாகத்தை பகிர்ந்த ’மாஸ்டர்’ பட நடிகை

’ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில், மாளவிகா மோகனன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-12-27 17:01 IST

சென்னை,

பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். தற்போது, தமிழில் 'சர்தார் 2', தெலுங்கில் 'தி ராஜா சாப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'தி ராஜா சாப்' படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று நடக்கிறது.

இந்நிலையில், விஜய்யின் ’ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில், மாளவிகா மோகனன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,

’என் திரைப்படத்தின்( தி ராஜா சாப்) முன் வெளியீட்டு விழாவால் இன்று பிஸியாகி விடுவதற்கு முன், “ஜனநாயகன்” இசை வெளியீட்டு விழாவைப் பற்றிய எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விஜய் சாருடன் பணியாற்றியது எனக்கு பெருமை. அவரை நண்பர் என்று அழைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது இன்னும் பெரிய பெருமை.

அவர் மிகச் சிறந்த மனிதர். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவராக, அவருக்கும் இந்த திரைப்படத்தின் குழுவுக்கும் என் உற்சாகத்தையும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேம்’ என்று தெரிவித்திருக்கிறார்.

மாளவிகா மோகனன் விஜய்யுடன் ’மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்