முதல் தெலுங்கு பட அனுபவத்தை பகிர்ந்த இவானா

​​ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள “சிங்கிள்” படத்தின் மூலம் இவானா தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.;

Update:2025-05-05 09:27 IST

சென்னை,

'லவ் டுடே' படத்தின் மூலம் புகழ் பெற்ற இவானா, ஆரம்பத்தில் ஆஷிஷுக்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமாக இருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது.

தற்போது ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள "சிங்கிள்" படத்தின் மூலம் தெலுங்கில் இவானா அறிமுகமாக உள்ளார். கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்தில் இவருடன் கெட்டிகா ஷர்மாவும் நடிக்கிறார். இப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை இவானா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

" கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி. ஸ்ரீ விஷ்ணு, வெண்ணிலா கிஷோர் மற்றும் கெட்டிகாவுடன் பணிபுரிந்தது அருமையாக இருந்தது. இதில் நான் ஹரினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

ஹரினி ஒரு நடன கலைஞர். எனக்கு நடனமாடுவது பிடிக்கும் என்பதால் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்